×

இந்திதான் இணைப்பு மொழியா ? – மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் !

இந்தியாவின் ஒரே அடையாளமாக இந்தி இருக்க வேண்டுமென அமித்ஷா பேசியதற்கு எதிராக திமுக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்துள்ளது. சமீபத்தில் கொண்டாடப்பட்ட இந்தி தினத்தின் போது இந்தியாவின் இணைப்பு மொழியாக அதிகமானோரால் பேசப்படும் இந்தியே இருக்க வேண்டும் எனவும், அப்படி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் நிலைநாட்டலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதையடுத்து அவரது கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்த கருத்துக்கு வலுவாக எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில் தமிழக மாவட்ட
 
இந்திதான் இணைப்பு மொழியா ? – மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் !

இந்தியாவின் ஒரே அடையாளமாக இந்தி இருக்க வேண்டுமென அமித்ஷா பேசியதற்கு எதிராக திமுக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட இந்தி தினத்தின் போது இந்தியாவின் இணைப்பு மொழியாக அதிகமானோரால் பேசப்படும் இந்தியே இருக்க வேண்டும் எனவும், அப்படி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் நிலைநாட்டலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

இதையடுத்து அவரது கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் இந்த கருத்துக்கு வலுவாக எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில் தமிழக மாவட்ட தலைநகரங்களில் இதற்கெதிராகப் போராட்டம் நடத்த திமுக உயர்நிலைக் குழு முடிவெடுத்துள்ளது. இந்தப் போராட்டம் செப்டம்பர் 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவ மாணவியர், சான்றோர், ஆன்மிக வழி நடப்போர் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News