×

டோல்கேட் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம் அல்லவா ? – நீதிமன்றம் கேள்வி !

மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரையுள்ள மோசமான நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்கும் வரை ஏன் சுங்கக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சத்தியநாராயணன் எழுதிய கடிதம் ஒன்றில் சென்னை மதுரவாயல் முதல் வேலூர், வாலாஜாபாத் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து வருகிறது. இது
 

மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரையுள்ள மோசமான நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்கும் வரை ஏன் சுங்கக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சத்தியநாராயணன் எழுதிய கடிதம் ஒன்றில் சென்னை மதுரவாயல் முதல் வேலூர், வாலாஜாபாத் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து வருகிறது.

இது தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, சாலையை ஒழுங்காக பரமரிக்கும் வரை ஏன் சுங்கக் கட்டணத்தை பாதியாக வசூலிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக  மத்திய சாலை போக்குவரத்துத் துறை, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலைத் துறை ஆகிய மூன்று துறைகளும் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News