×

ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார்: விசாரணையில் கிடுக்கிப்பிடி கேள்வி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் எழுந்தநிலையில் அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அப்பால்லோ மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள் இந்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்காமல் ஆஜராகமல் இருப்பதாக கண்டனம் தெரிவித்தார். சம்மன் அனுப்பப்படுபவர்கள் சரியான நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி தெரிவித்தார். இதனையடுத்து
 
ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார்: விசாரணையில் கிடுக்கிப்பிடி கேள்வி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் எழுந்தநிலையில் அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால் அப்பால்லோ மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள் இந்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்காமல் ஆஜராகமல் இருப்பதாக கண்டனம் தெரிவித்தார். சம்மன் அனுப்பப்படுபவர்கள் சரியான நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பியுள்ளார். அந்த கேள்விகள் பின்வருமாறு.

* 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் பேஸ்மேக்கர் பொருத்தும் நிலையில் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்குக் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு என்றுதான் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவ்வாறு ஒரு செய்தியை வெளியிட அனுமதி அளித்தது யார்?

* பல உறுப்புகளில் பாதிப்பு இருந்த நிலையில் ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்புவார் என அப்பல்லோ தெரிவித்தது ஏன்?

* ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, குறிப்பிட்ட பகுதிக்கான சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார்?

* அவரை வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல தேவையில்லை என்று தெரிவித்தது ஏன்?

* சுமார் 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருணம் மற்றும் பிற பகுதிகளுக்கு மருத்துவ சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் எங்கே?

இதுபோன்ற பல கிடிக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி ஏழு நாட்களுக்குள் மருத்துவமனையில் பதிவான மொத்த சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News