×

யாரும் சீண்டாத ஜெயலலிதாவின் சொத்து – இதுதான் உங்கள் விஸ்வாசமா ?

ஜெயலலிதா தனது பயணத்திற்காக பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட்டபோது அதை யாருமே வாங்க முன்வரவில்லை . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்துக்காக 2006ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டரை வாங்கினார். பெல் 412 ரக ஹெலிகாப்டரான அதில் ஒரே சமயத்தில் 11 பேர் பயணிக்கலாம். ஜெயலலிதா இறந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதனைப் பாதுகாப்பதற்கு அதிக செலவு ஆவதால் அதனை ஏலம் விட முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி இந்த ஹெலிகாப்டரின்
 
யாரும் சீண்டாத ஜெயலலிதாவின் சொத்து – இதுதான் உங்கள் விஸ்வாசமா ?

ஜெயலலிதா தனது பயணத்திற்காக பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட்டபோது அதை யாருமே வாங்க முன்வரவில்லை .

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்துக்காக 2006ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டரை வாங்கினார். பெல் 412 ரக ஹெலிகாப்டரான அதில் ஒரே சமயத்தில் 11 பேர் பயணிக்கலாம். ஜெயலலிதா இறந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதனைப் பாதுகாப்பதற்கு அதிக செலவு ஆவதால் அதனை ஏலம் விட முடிவு எடுக்கப்பட்டது.

அதன் படி இந்த ஹெலிகாப்டரின் ஆரம்பவிலை 35 கோடி ரூபாய் என அறிவிகப்பட்டது. ஆனால் இதை ஏலத்தில் எடுக்க யாருமே முன் வரவில்லை. வெளியாட்கள்தான் யாரும் வரவில்லை என்றால் ஜெயலலிதா அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த கீழே இருந்துகொண்டே வணங்கிய அதிமுக அமைச்சர்களும் அதை வாங்கவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். இதையடுத்து மீண்டும் ஆரம்பவிலை இல்லாமல் இதை ஏலம் விட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News