×

நீட் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் கமல்தான் – ஜெயக்குமார் காட்டம் !

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீட் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் கமல்தான் எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு நீட் ஆள்மாறாட்ட மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சம்மந்தமான சில மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுசம்மந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ நீட் ஆள்மாறாட்டத்துக்கு வசூல்ராஜா படத்தின் மூலம் வித்திட்டவர் கமல்தான். அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்றே
 
நீட் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் கமல்தான் – ஜெயக்குமார் காட்டம் !

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீட் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் கமல்தான் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு நீட் ஆள்மாறாட்ட மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சம்மந்தமான சில மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுசம்மந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்மந்தமாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ நீட் ஆள்மாறாட்டத்துக்கு வசூல்ராஜா படத்தின் மூலம் வித்திட்டவர் கமல்தான். அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அது ஒரு அலிபாபா குகை மற்றும் கலாச்சார சீரழிவு’ எனத் தெரிவித்துள்ளார்.

வசூல்ராஜா படத்தில் கமல் தனக்கு பதிலாக கிரேஸி மோகனை மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத வைப்பார். இது சமூகவலைதளங்களாக மீம்களாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அதை ஒரு அமைச்சர் சொல்லியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News