×

கமல் சினிமாவில் மட்டும்தான் முதல்வர் ஆகலாம் – செல்லூர் ராஜு கருத்து !

மதுரையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல்ஹாசன் தனது கட்சியை மறு நிர்மாணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜு ‘கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம். நிஜத்தில் அவர் முதல்வர் ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சினிமாவில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர்
 
கமல் சினிமாவில் மட்டும்தான் முதல்வர் ஆகலாம் – செல்லூர் ராஜு கருத்து !

மதுரையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல்ஹாசன் தனது கட்சியை மறு நிர்மாணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜு ‘கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம். நிஜத்தில் அவர் முதல்வர் ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சினிமாவில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். 1967ல் புரட்சித் தலைவர் குண்டடிபட்ட வால்போஸ்டர் தான் திமுக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் போல இல்லாமல் கமலை வெறும் நடிகராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். முழு நேர அரசியலில் இருப்பேன் என்று சொன்ன அவர் இப்போது மீண்டும் சினிமாவுக்கே சென்றுவிட்டார். அவரது மக்கள் செல்வாக்கு என்ன என்பதை கடந்த மக்களவைத் தேர்தலிலேயே மக்கள் அவருக்கு உணர்த்திவிட்டனர்’ எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News