×

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

நேற்று நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சஞ்சய் தத் கூறிய கருத்தால் சலசலப்புகள் உருவாகியுள்ளன. நாங்குநேரி இடைத்தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்காக இரு கட்சிகளுக்கும் இடையில் பயங்கரமான போட்டி நிலவிய நிலையில் காங்கிரஸூக்காக திமுக சீட்டை விட்டுக்கொடுத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையில் விரிசல் விழும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. காந்தியடிகளின் 150ஆவது பிறந்ததின விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர்
 
காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

நேற்று நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சஞ்சய் தத் கூறிய கருத்தால் சலசலப்புகள் உருவாகியுள்ளன.

நாங்குநேரி இடைத்தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்காக இரு கட்சிகளுக்கும் இடையில் பயங்கரமான போட்டி நிலவிய நிலையில் காங்கிரஸூக்காக திமுக சீட்டை விட்டுக்கொடுத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையில் விரிசல் விழும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

காந்தியடிகளின் 150ஆவது பிறந்ததின விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர்  அனைத்து மாநிலங்களிலும் பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.

அக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்குநேரி தொகுதிக்காக நாம் திமுக வுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.’ எனக் கூறினார்.

அப்போது கூட்டத்தில் உள்ளவர்கள் ‘காமராஜர் ஆட்சி என்னாச்சு ?’ எனக் கேட்க, அதற்குப் பதிலளித்த சஞ்சய் தத் ‘தமிழகத்தில் எங்கே சென்றாலும் நான், காமராஜர் ஆட்சி அமைப்பதே நமது நோக்கமென்று வலியுறுத்தி வருகிறேன். . ஆனால் எதார்த்தம் வேறாக உள்ளது. 7 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு நாம் எப்படி காமராஜர் ஆட்சி அமைக்க முடியும். முதலில் இந்த ஏழு எம்.எல்.ஏ.க்களை நாம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 70 எம்.எல்.ஏ.க்களாக மாற்றுவோம்’ எனப் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News