×

கடைசி நேரத்துல ஹீரோ மாதிரி வந்துருக்கேன் – அதிமுகவிலும் வேலையைக் காட்டிய ராதாரவி !

நடிகரும் முன்னாள் திமுக உறுப்பினருமான ராதாரவி தான் அதிமுகவில் இணைந்த முதல்நாளே அளித்த பேட்டியின் மூலம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அருவருக்கும் வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் எப்படியும் மறுபடியும் உள்ளே நுழைந்துவிடலாம் என நினைத்தவருக்கு திமுக வின் கதவுகள் திறக்காததால் அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டார். இதனையடுத்து ராதாரவி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து
 
கடைசி நேரத்துல ஹீரோ மாதிரி வந்துருக்கேன் – அதிமுகவிலும் வேலையைக் காட்டிய ராதாரவி !

நடிகரும் முன்னாள் திமுக உறுப்பினருமான ராதாரவி தான் அதிமுகவில் இணைந்த முதல்நாளே அளித்த பேட்டியின் மூலம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அருவருக்கும் வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் எப்படியும் மறுபடியும் உள்ளே நுழைந்துவிடலாம் என நினைத்தவருக்கு திமுக வின் கதவுகள் திறக்காததால் அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டார்.

இதனையடுத்து ராதாரவி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் தஞ்சம் அடைந்தார். அதிமுகவே இப்போது இடியாப்ப சிக்கலில் இருக்கும் போது புது சிக்கலாக சேர்ந்த ராதாரவிக்கு போடப்பட்ட முதல் கண்டீஷனே இப்போதைக்கு ஊடகங்களிடம் பேசவேண்டாம் என்பதுதானாம்.

ஆனால் அதையும் மீறி ஊடகங்களை சந்தித்தது மட்டுமல்லாமல் தனது உளறலால் அதிமுக தலைமையை சீண்டியுள்ளார். நிரூபர்கள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை அமைப்பது குறித்து சிக்கல்கள் எழுந்துள்ள வேளையில் இப்போது அந்த கட்சியில் சேரலாமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ‘இப்ப சேந்தா என்ன..? சினிமாவுல ஹீரோ கடைசி நேரத்துல வந்து காப்பாத்துவன்ல அப்படி வந்துருக்கேன்’ என உளறிக் கொட்டியுள்ளார். இதனால் அதிமுக தலைமை அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News