×

இப்பவும் சொல்றேன்… தமிழ்நாட்டு தலைமைக்கு வெற்றிடம் இருக்கு.. ரஜினி பேட்டி

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு இப்போதும் வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவிற்கு பின் தமிழக அரசியலின் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், இதை அதிமுக ஏற்காமால் எடப்பாடியே அந்த தலைமை எனவும், திமுக தரப்பில் மு.க.ஸ்டாலினே அந்த தலைமை எனவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதே கருத்தை ரஜினியும் முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் ரஜினி பேட்டி கொடுத்த
 
இப்பவும் சொல்றேன்… தமிழ்நாட்டு தலைமைக்கு வெற்றிடம் இருக்கு.. ரஜினி பேட்டி

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு இப்போதும் வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவிற்கு பின் தமிழக அரசியலின் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், இதை அதிமுக ஏற்காமால் எடப்பாடியே அந்த தலைமை எனவும், திமுக தரப்பில் மு.க.ஸ்டாலினே அந்த தலைமை எனவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதே கருத்தை ரஜினியும் முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் ரஜினி பேட்டி கொடுத்த போது ‘ திருவள்ளுவரை போல் எனக்கும் காவி நிறம் பூச பார்க்கிறார்கள். இதில் திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன்’ என அதிரடி பேட்டி கொடுத்தார்.

அப்போது ஒரு நிருபர் ‘தமிழக அரசியல் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகவும் இப்போதும் கருதுகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய ரஜினி ‘இப்போதும் சொல்கிறேன்.. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது’ எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News