×

வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம்… எந்த கார் தெரியுமா? – சீமான் பேச்சு !

மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம் எனத் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்தவர்களுக்கான மாவீரர் நினைவு நாள் நேற்று தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை ஒத்தக்கடை தெருவில் நடந்த கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
 
வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம்… எந்த கார் தெரியுமா? – சீமான் பேச்சு !

மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வீடு கார் கொடுப்போம் எனத் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்தவர்களுக்கான மாவீரர் நினைவு நாள் நேற்று தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை ஒத்தக்கடை தெருவில் நடந்த கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவரது பேச்சின் ஒரு பகுதியாக ‘நாம் தமிழரை விட்டால் தமிழகத்துக்கு நாதி கிடையாது. ஏனெனில் எங்களைவிட இந்த மண்ணின் மக்களை நேசிப்பவர்கள் உலகத்திலேயே கிடையாது. ஏதாவது செய்து மேலே வந்துவிடுங்கள் என நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். அதனால் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு கார் கொடுப்பதாக அறிக்கை வெளியிடவுள்ளோம். சீமான் கார் தருகிறார் என்று அனைவரும் எனக்கு வாக்களித்துவிடுவர். வெற்றி பெற்ற பின் ஒவ்வொரு வீடாகச் சென்று கார் என்று சொல்லி ஒரு படத்தைக் காண்பிப்பேன். இவர்தான் ‘அம்பேத்கார்’. இவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News