×

அமைச்சர் ஜெயக்குமார் மீட்ஸ் பூம் பூம் மாடு – டிவிட்டரில் மகிழ்ச்சி

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீடியாக்களை சந்திக்கும் நாட்களில் மீம் கிரியேட்ட்ர்ஸ்க்குக் கொண்டாட்டம்தான். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வினோதமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டினப்பாக்கம் பகுதியில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் அவர் எதிரே வரும் பூம் பூம் மாட்டுக்காரரை நிறுத்தி அந்த மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். அதை வீடியோவாக எடுத்து டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டில் ‘பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும் மேளந்தட்டி
 
அமைச்சர் ஜெயக்குமார் மீட்ஸ் பூம் பூம் மாடு – டிவிட்டரில் மகிழ்ச்சி

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீடியாக்களை சந்திக்கும் நாட்களில் மீம் கிரியேட்ட்ர்ஸ்க்குக் கொண்டாட்டம்தான். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வினோதமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பட்டினப்பாக்கம் பகுதியில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் அவர் எதிரே வரும் பூம் பூம் மாட்டுக்காரரை நிறுத்தி அந்த மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். அதை வீடியோவாக எடுத்து டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டில் ‘பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களைக் கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாட்டின் தலையசைப்பும், பூம்பூம் மாட்டுக்காரரின் பேச்சும் என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News