×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்!

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கூட்டணி பற்றிய பேச்சு அதீதமான கற்பனை நிறைந்தது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது எங்கள் கவனம் எல்லாமே டெல்லிதான். இனி மத்தியில் அதிமுக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி எங்கள் ஆதரவோடு அமையும் ஆட்சியில் நாங்கள் 10 அமைச்சர் பதவிகளை கேட்போம் என்றார் அதிரடியாக. இந்நிலையில் இன்று இதற்கு
 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேரம் பேசும் திறமை: இல.கணேசன் கிண்டல்!

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கூட்டணி பற்றிய பேச்சு அதீதமான கற்பனை நிறைந்தது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்போது எங்கள் கவனம் எல்லாமே டெல்லிதான். இனி மத்தியில் அதிமுக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி எங்கள் ஆதரவோடு அமையும் ஆட்சியில் நாங்கள் 10 அமைச்சர் பதவிகளை கேட்போம் என்றார் அதிரடியாக.

இந்நிலையில் இன்று இதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் யாருடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகவில்லை. எந்த கட்சியுமே இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.

ஆனால் ராஜேந்திர பாலாஜி அதீத கற்பனை செய்து பேசியுள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது என்ன பேரம் பேசலாம் என்று நாளை நடைபெற இருப்பதை பற்றி சிந்திக்கின்ற அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறது. அவரின் கற்பனை நடக்குமா, நடக்காதா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என கிண்டலாக தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News