×

ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாத அமைச்சர்கள் – கட்சியில் குறையும் மரியாதை !

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 10 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியா திரும்பிய நிலையில் அவரை வரவேற்க ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே விமான நிலையம் சென்றார். 10 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு தமிழகம் திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கூடினர். ஆனால் அமைச்சர்கள் என்று பார்த்தால் மாஃபா பாண்டியராஜன் மட்டும்தான் வந்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 10 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியா திரும்பிய நிலையில் அவரை வரவேற்க ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே விமான நிலையம் சென்றார்.

10 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு தமிழகம் திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கூடினர். ஆனால் அமைச்சர்கள் என்று பார்த்தால் மாஃபா பாண்டியராஜன் மட்டும்தான் வந்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று திரும்பியபோது அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கூடி வரவேற்றனர். இந்நிலையில் அதேபோல வரவேற்பு ஓபிஎஸ்-க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் நேற்று சென்னையில் இருந்தும் அவரை வரவேற்காததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் கட்சிக்குள் மீண்டும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் பனிப்போர் வெடித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News