×

வேண்டும் நடமாடும் டாஸ்மாக் கடைகள் – எம்.எல்.ஏ-வின் கோரிக்கை !

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி மதுவிலக்கை 90 சதவீதம் அமல்படுத்திவிட்டார். ஆனால் அதேப் போல ஆட்சிக்கு வந்த தமிழக அரசு மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அதற்காக துரும்பைக் கூட எடுத்துபோடவில்லை. டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். இந்நிலையில்
 
வேண்டும் நடமாடும் டாஸ்மாக் கடைகள் – எம்.எல்.ஏ-வின் கோரிக்கை !

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திராவில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி மதுவிலக்கை 90 சதவீதம் அமல்படுத்திவிட்டார். ஆனால் அதேப் போல ஆட்சிக்கு வந்த தமிழக அரசு மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அதற்காக துரும்பைக் கூட எடுத்துபோடவில்லை. டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின் போது காங்கேயம் எம்.எல்.ஏ. தனியரசு ‘மாலை நேரங்களில் மக்கள் டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்க படாதபாடு படுகின்றனர். இதனால் மொபைல் டாஸ்மாக் கடைகளை அமைத்து அரசு மக்களுக்கு மதுவை விநியோகம் செய்ய வேண்டும்’ எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News