×

கமலுக்கு பதில் கொடுத்து மாட்டிக் கொண்ட மோடி – வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Narendira Modi – கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள பதில் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே. காந்தியின் மகனாக இதைக் கூறுகிறேன்’ என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், பாஜக, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கோட்சேவை வசதியாக விட்டுவிட்டு, இந்துக்களை கமல்ஹாசன் தீவிரவாதி போல் சித்தரிக்கிறார் என மாற்றி அவர் மீது வசை பாடி வருகின்றனர். மேலும், கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு
 
கமலுக்கு பதில் கொடுத்து மாட்டிக் கொண்ட மோடி – வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Narendira Modi – கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள பதில் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே. காந்தியின் மகனாக இதைக் கூறுகிறேன்’ என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், பாஜக, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கோட்சேவை வசதியாக விட்டுவிட்டு, இந்துக்களை கமல்ஹாசன் தீவிரவாதி போல் சித்தரிக்கிறார் என மாற்றி அவர் மீது வசை பாடி வருகின்றனர்.

மேலும், கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கமல்ஹாசன் பிரச்சார்த்திற்கு செல்லவில்லை. தொடர்ந்து பதட்டம் அதிகரித்திருப்பதால் கமல்ஹாசனின் சென்னை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கமலுக்கு பதில் கொடுத்து மாட்டிக் கொண்ட மோடி – வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இந்நிலையில், இதுபற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டிக்கு பதிலளித்த மோடி ‘கமல்ஹாசனை போன்று எனக்கு அறிவுக்கூர்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால், என் அறிவுக்கு எட்டியவரை ஒரு இந்து ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. அப்படி ஒருவர் இருந்தால் அவர் இந்துவே கிடையாது” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ‘இந்துக்கள் தீவிரவாதியாக இருக்க முடியாது எனில், கோட்சே இந்து இல்லையா?’ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News