×

முரசொலி எனக்கு மூத்த அண்ணன்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வடிவிலான அறிக்கை ஒன்றை முரசொலியில் வெளியிட்டுள்ளார். அதில் முரசொலி கலைஞருக்கு மூத்த பிள்ளை என்றால், எனக்கு மூத்த அண்ணன் என குறிப்பிட்டுள்ளார். முரசொலி பத்திரிக்கை 1942-ஆம் ஆண்டு கலைஞரால் ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதனை கருணாநிதி தனது மூத்த பிள்ளை என அடிக்கடி கூறினார். அந்த அளவுக்கு முரசொலியை கருணாநிதி நேசித்தார். 76 ஆண்டுகள் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட முரசொலியை தொண்டர்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என ஸ்டாலின்
 
முரசொலி எனக்கு மூத்த அண்ணன்: மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வடிவிலான அறிக்கை ஒன்றை முரசொலியில் வெளியிட்டுள்ளார். அதில் முரசொலி கலைஞருக்கு மூத்த பிள்ளை என்றால், எனக்கு மூத்த அண்ணன் என குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி பத்திரிக்கை 1942-ஆம் ஆண்டு கலைஞரால் ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதனை கருணாநிதி தனது மூத்த பிள்ளை என அடிக்கடி கூறினார். அந்த அளவுக்கு முரசொலியை கருணாநிதி நேசித்தார். 76 ஆண்டுகள் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட முரசொலியை தொண்டர்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை முரசொலியில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், கழக உடன்பிறப்புகளுக்கு முரசொலி வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். முரசொலியை வளர்ப்பது என்பது தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும். முரசொலி, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு மூத்த அண்ணன் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News