×

என் நம்பரைக் கலெக்டர் பிளாக் செய்துவிட்டார் – ஜோதிமணி எம்.பி. புகார் !

கரூர் தொகுதி மக்களவை எம்.பி.யான ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் தன்னுடைய மொபைல் நம்பரை பிளாக் செய்துவிட்டதாகப் புகார் கூறியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் அந்த தொகுதியின் மக்களவை வேட்பாளரான ஜோதிமணிக்கும் இடையேயான மோதல் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தொடங்கிவிட்டது. இதனால் கரூர் மாவட்டக் கலெக்டர் ஜோதிமணியின் மொபைல் எண்ணை அப்போது பிளாக் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி இப்போது பேசியுள்ள ஜோதிமணி’ கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் ஒழுங்காக நடவடிக்கை எடுக்காததேக் காரணம்.
 
என் நம்பரைக் கலெக்டர் பிளாக் செய்துவிட்டார் – ஜோதிமணி எம்.பி. புகார் !

கரூர் தொகுதி மக்களவை எம்.பி.யான ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் தன்னுடைய மொபைல் நம்பரை பிளாக் செய்துவிட்டதாகப் புகார் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் அந்த தொகுதியின் மக்களவை வேட்பாளரான ஜோதிமணிக்கும் இடையேயான மோதல் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தொடங்கிவிட்டது. இதனால் கரூர் மாவட்டக் கலெக்டர் ஜோதிமணியின் மொபைல் எண்ணை அப்போது பிளாக் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி இப்போது பேசியுள்ள ஜோதிமணி’ கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் ஒழுங்காக நடவடிக்கை எடுக்காததேக் காரணம். குடிநீர்த் திட்ட பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்துக்கு என்னை யாருமே அழைக்கவில்லை. அதிமுக அரசில் மற்றக் கட்சியினர் பொதுசேவை செய்யக்கூடாது என்பதாலேயே இப்படி நடந்து கொள்கிறார்கள். தேர்தலின் போது என் நம்பரை பிளாக் செய்த கலெக்டர் இன்னும் அதை அன்பிளாக் செய்யவில்லை. ஒரு எம்.பி.யின் நம்பரை பிளாக் செய்வது மக்கள் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாதா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News