×

27 ஆண்டு சிறைத் தண்டனையில் முதல் பரோல் – நளினிக்கு ஒரு மாதம் விடுதலை !

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினிக்கு அவரது மகளின் திருமணத்துக்காக ஒருமாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நளினி, அவரது மகள் திருமனத்துக்காக 6 மாதக் காலம் சிறைத்துறையிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் சிறைத்துறை அதற்கு மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றத்தில்
 
27 ஆண்டு சிறைத் தண்டனையில் முதல் பரோல் – நளினிக்கு ஒரு மாதம் விடுதலை !

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினிக்கு அவரது மகளின் திருமணத்துக்காக ஒருமாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நளினி, அவரது மகள் திருமனத்துக்காக 6 மாதக் காலம் சிறைத்துறையிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் சிறைத்துறை அதற்கு மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அவருக்கு ஒருமாதம் பரோல் வழங்க சிறை நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் இப்போது அவர் தங்க இருக்கும் இருப்பிடம் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. நளினிக்கு அவரது தாய் பத்மாவும், இன்னொரு உறவினர் பெண்ணும் ஜாமீன் வழங்கியுள்ளனர். இந்த ஒருமாதக் காலத்தில் நளினியின் மகள் ஹரித்ராவின் திருமணம் வேலூரிலேயே நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் நளினி சிறையில் இருந்து வெளியில் வருவார் எனக் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News