×

அம்மா இல்ல…. மோடிதான் எங்கள் டாடி – ராஜேந்திர பாலாஜி

Rajendra Balaji : பிரதமர் மோடிதான் எங்கள் டாடி என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரளவுக்கு ஆளுமை உள்ள தலைவர் அதிமுகவில் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தாலும் பாஜகவின் ஆதரவிலேயே ஆட்சி நீடிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக சந்திக்கவுள்ளது. சமீபத்தில் வண்டலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி, ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிச்சாமி, ராமதாஸ்
 
அம்மா இல்ல…. மோடிதான் எங்கள் டாடி – ராஜேந்திர பாலாஜி

Rajendra Balaji : பிரதமர் மோடிதான் எங்கள் டாடி என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரளவுக்கு ஆளுமை உள்ள தலைவர் அதிமுகவில் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தாலும் பாஜகவின் ஆதரவிலேயே ஆட்சி நீடிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலை கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக சந்திக்கவுள்ளது. சமீபத்தில் வண்டலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி, ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிச்சாமி, ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை ஸ்ரீபெரும்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி “அம்மா இல்லாத இடத்தில் மோடிதான் எங்கள் டாடி. அவர் இந்தியாவுக்கே டாடி.. மோடியுடன் ஜெயலலிதா நல்ல நட்பு வைத்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News