×

எனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கள் கட்சிக்கு ஒட்டுப் போட்ட 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் எனப் பேசியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ‘வெளி மாநிலத்தவர்கள் எல்லாம் தமிழகம் வந்து தமிழ் கற்று கொண்டு தங்களை தமிழர்கள் என
 
எனக்கு ஓட்டுப் போட்ட 18 லட்சம் பேர்தான் தமிழர்கள் – சீமான் சர்ச்சைப் பேச்சு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கள் கட்சிக்கு ஒட்டுப் போட்ட 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் எனப் பேசியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் ‘வெளி மாநிலத்தவர்கள் எல்லாம் தமிழகம் வந்து தமிழ் கற்று கொண்டு தங்களை தமிழர்கள் என அடையாளப்படுத்தி கொள்கின்றனர். தமிழர்களோ தமிழே சரியாக தெரியாமல் சுற்றி கொண்டிருக்கின்றனர். என்னைப் பார்த்து எல்லோரும் கேட்கிறார்கள். 10 வருடமாக கத்திக்கொண்டு இருக்கிறாயே ? உனக்கு ஏன் யாரும் ஓட்டுப்போடவில்லை என்று ?

எனக்கு ஓட்டுப்போட்ட 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள். மற்றவர்கள் எல்லாம் தமிங்கிலர்கள். இவர்களுக்கு தமிழையே ஆங்கிலத்தில் எழுதினால்தான் புரியும். இவர்களையெல்லாம் கட்டி வைத்து தோலை உரிக்க வேண்டும். 60 வயதான அப்பனைக் கிழவன் என்று சொல்கிறார்கள். ஆனால் 70 வயதான நடிகனை தலைவன் என்கிறார்கள்.’ எனக் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News