×

கமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன??

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்த கமலுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவக்குமார் அரக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சூர்யா நுழைவு தேர்வு குறித்தும் புதிய கல்விக்கொள்கை குறித்து தனது காட்டமான விமரச்னத்தை முனவைத்தார். சூர்யாவின் பேச்சை பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களை தவிர்த்து அரசியல் முக்கிய நபர்களும் பேசினர். அதில் குறிப்புடத்தக்கவர்கள் நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
 
கமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன??

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு ஆதரவு தெரிவித்த கமலுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவக்குமார் அரக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சூர்யா நுழைவு தேர்வு குறித்தும் புதிய கல்விக்கொள்கை குறித்து தனது காட்டமான விமரச்னத்தை முனவைத்தார். சூர்யாவின் பேச்சை பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களை தவிர்த்து அரசியல் முக்கிய நபர்களும் பேசினர்.

அதில் குறிப்புடத்தக்கவர்கள் நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன். இந்நிலையில் சூர்யா தனக்கு ஆதரவு தெரிவித்த பலரை விட்டுவிட்டு கமலுக்கு மட்டும் நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா ஏன் இவ்வாறு செய்துள்ளா என தெரியாத நிலையில் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு,

கல்விக்கொள்கை குறித்த தன்னுடைய பேச்சுக்கும், அதற்காக எழுந்த எதிர்வினைக்கும் ஆதரவும் தெரிவித்த கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு நன்றி. திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்வி பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News