×

ஈபிஎஸ்-க்குப் போட்டியாக ஓபிஎஸ் போஸ்டர் – அதிமுகவில் அதிகாரப்போட்டி !

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின் போது ஈபிஎஸ்-ஐ வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசியது அக்கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜன் செல்லப்பா ஓபிஎஸ் சொல்லிதான் அப்படி பேசுகிறார் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனையடுத்து அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க அவசரமாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்
 
ஈபிஎஸ்-க்குப் போட்டியாக ஓபிஎஸ் போஸ்டர் – அதிமுகவில் அதிகாரப்போட்டி !

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின் போது ஈபிஎஸ்-ஐ வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசியது அக்கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜன் செல்லப்பா ஓபிஎஸ் சொல்லிதான் அப்படி பேசுகிறார் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனையடுத்து அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க அவசரமாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அதிமுக அலுவலகத்திற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சிலர் ‘ பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே’ எனப் போஸ்டர் ஒட்டியது சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இப்போது ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ‘அம்மா மூன்று முறை முதல்வர் ஆக்கிய, தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.. கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாருங்கள், இது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாகும்’ எனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சைகளுக்கு மேலும் வழிவகுத்துள்ளது. இதன் மூலம் அதிமுகவுக்குள் அதிகாரத்துக்கான போட்டி நிலவி வருகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News