×

வேலூரில் பணப்பட்டுவாடா ; சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ – அதிர்ச்சி வீடியோ

Kovi Sampath video – வேலூர் தொகுதியில் வாக்களர்களுக்கு பண வினியோகம் செய்வது குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத் தனது ஆட்களுடம் பேசிக் கொண்டிருந்த விவகாரம் வீடியோவாக வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் பணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. திமுக, அமமுக வேட்பாளர்கள் தொடர்பான இடங்களில் மட்டுமே வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை செய்து வருகின்றனர். ஆனால், அதிமுக
 
வேலூரில் பணப்பட்டுவாடா ; சிக்கிய அதிமுக எம்.எல்.ஏ – அதிர்ச்சி வீடியோ

Kovi Sampath video – வேலூர் தொகுதியில் வாக்களர்களுக்கு பண வினியோகம் செய்வது குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத் தனது ஆட்களுடம் பேசிக் கொண்டிருந்த விவகாரம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் பணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. திமுக, அமமுக வேட்பாளர்கள் தொடர்பான இடங்களில் மட்டுமே வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை செய்து வருகின்றனர். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் தொடர்பான இடங்களில் அவர்கள் எந்த சோதனையும் செய்வதில்லை என பல்வேறு அரசியல் தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் தொகுதியில் அதிமுக சார்பாக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாணியம்பாடி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது ஆட்களிடம் வாக்களர்களுக்கு ரூ.500 பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால், அது என்னுடைய குரல் அல்ல. திமுகவின் மிமிக்ரி செய்து இதை வெளியிட்டுள்ளனர். என கோவி சம்பத் விளக்கம் அளித்துள்ளார். வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News