×

அமைச்சர்களுக்கு ஆப்பு வைக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பு?: அலர்ட் நிலையில் உளவுத்துறை!

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு சமீப காலமாக குறிப்பிடத்தகும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அமைச்சர்களுக்கு எதிராக வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது இந்த அமைப்பு. மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு அமைச்சருக்கும் இருக்கும் சொத்துக்களின் பட்டியலை மாவட்ட வாரியாக திரட்ட ஆரம்பித்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அமைச்சர்களின் சொத்து விவரங்களை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த சொத்துப்பட்டியல் வெளியானால் பல அமைச்சர்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
 
அமைச்சர்களுக்கு ஆப்பு வைக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பு?: அலர்ட் நிலையில் உளவுத்துறை!

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு சமீப காலமாக குறிப்பிடத்தகும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அமைச்சர்களுக்கு எதிராக வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது இந்த அமைப்பு.

மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு அமைச்சருக்கும் இருக்கும் சொத்துக்களின் பட்டியலை மாவட்ட வாரியாக திரட்ட ஆரம்பித்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக அமைச்சர்களின் சொத்து விவரங்களை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த சொத்துப்பட்டியல் வெளியானால் பல அமைச்சர்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

எனவே அந்த சொத்துப்பட்டியல் எந்த காரணத்துக்காகவும் வெளியாகக்கூடாது என தமிழக அரசு உளவுத்துறையை அலர்ட் செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதே போலத்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொத்து விவகாரத்தால் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு ஆளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News