×

அரசியல் ரீதியாக மிரட்டல்கள் வருகின்றன – நிர்மலாதேவியின் வழக்கறிஞர் புகார் !

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின், நீதிமன்ற வளாகத்தில் தனக்கு சாமி வந்தது போல் பேசி தியானத்தில் ஈடுபட்டார். அவருக்கு மனநலப்பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. மனநல மருத்துவ காப்பகத்தில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். சிறையில் நடந்த சித்ரவதைகளால்தான் அவர் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என அவரின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் மாதந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர்
 
அரசியல் ரீதியாக மிரட்டல்கள் வருகின்றன – நிர்மலாதேவியின் வழக்கறிஞர் புகார் !

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின், நீதிமன்ற வளாகத்தில் தனக்கு சாமி வந்தது போல் பேசி தியானத்தில் ஈடுபட்டார். அவருக்கு மனநலப்பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. மனநல மருத்துவ காப்பகத்தில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். சிறையில் நடந்த சித்ரவதைகளால்தான் அவர் இப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என அவரின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் மாதந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகை வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் நீதிமன்றத்துக்குக் காரில் வரும் அவர் வழக்கத்துக்கு மாறாக நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்நிலையில் அவரது வழக்கறிஞர்’ அரசியல் ரீதியாக மிரட்டல்கள் நிர்மலாதேவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மிரட்டல்கள் வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் ஆளுநர் இருக்கும்வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது. சிகிச்சைக்குப் பிறகு நிர்மலா தேவி மனநலமுடன் இருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News