×

பாலியல் வன்கொடுமை வழக்கு – பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எஸ்கேப்?

தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திடீர் தலைமறைவாகியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக நக்கீரன் கோபால் ஏற்கனவே தான் வெளியிட்ட வீடியோவில் புகார் கூறியிருந்தார். ஆனால், ஜெயராமன் தொடர்ந்து அதை மறுத்து வருகிறார். 2016ம் ஆண்டு ஜெயராமனின் மகன் பிரவீன் தனது நண்பர்களுடன் காரில் வேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவருடன் வந்த இளம்பெண் பலியானார். இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று
 
பாலியல் வன்கொடுமை வழக்கு – பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எஸ்கேப்?

தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திடீர் தலைமறைவாகியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக நக்கீரன் கோபால் ஏற்கனவே தான் வெளியிட்ட வீடியோவில் புகார் கூறியிருந்தார். ஆனால், ஜெயராமன் தொடர்ந்து அதை மறுத்து வருகிறார்.

2016ம் ஆண்டு ஜெயராமனின் மகன் பிரவீன் தனது நண்பர்களுடன் காரில் வேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவருடன் வந்த இளம்பெண் பலியானார். இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 15ம் தேதி பிரவீன் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கு – பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எஸ்கேப்?

ஆனால், பொள்ளாச்சி விவகாரம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரானால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் பிரவீன் நேற்று ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு, பொள்ளாச்சி விவகாரம் பூதாகரம் ஆக தொடங்கிய உடனேயே அவர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவினிடம் விசாரணை நடத்துவோம் என மகளிர் ஆணைய தலைவி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News