×

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு – ஸ்டாலினின் மருமகன் மீது வழக்குப்பதிவு

FIR on Sabareesan : பொள்ளாச்சி பலாத்கார வழக்கு தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரில் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும்
 
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு – ஸ்டாலினின் மருமகன் மீது வழக்குப்பதிவு

FIR on Sabareesan : பொள்ளாச்சி பலாத்கார வழக்கு தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரில் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு – ஸ்டாலினின் மருமகன் மீது வழக்குப்பதிவு

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடெங்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனது தொழில்நுட்ப பிரிவு மூலம் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News