×

அதிமுக வில் இணைந்த ராதாரவி – அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !

நடிகரும் திமுகவில் பேச்சாளராகவும் இருந்த ராதாரவி இப்போது அதிமுகவில் இணைந்துள்ளதார். திமுக மேடைகளில் பரபரப்பாக பேசி வந்த மேடைப் பேச்சாளர்களில் ராதாரவி முக்கியமானவர். சினிமா நடிகர் எனும் இமேஜும் சேர்ந்து கொண்டதால் இவர் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது, எதிர்க் கட்சிக் காரர்களை கெட்டவார்த்தைகளால் திட்டுவது என ரொம்பவே ஓவராகப் போய்க் கொண்டிருந்தார் ராதாரவி. ராதாரவி பேசும்போது மேடையில் உள்ளவர்களே சில
 
அதிமுக வில் இணைந்த ராதாரவி – அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !

நடிகரும் திமுகவில் பேச்சாளராகவும் இருந்த ராதாரவி இப்போது அதிமுகவில் இணைந்துள்ளதார்.

திமுக மேடைகளில் பரபரப்பாக பேசி வந்த மேடைப் பேச்சாளர்களில் ராதாரவி முக்கியமானவர். சினிமா நடிகர் எனும் இமேஜும் சேர்ந்து கொண்டதால் இவர் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவது, எதிர்க் கட்சிக் காரர்களை கெட்டவார்த்தைகளால் திட்டுவது என ரொம்பவே ஓவராகப் போய்க் கொண்டிருந்தார் ராதாரவி. ராதாரவி பேசும்போது மேடையில் உள்ளவர்களே சில நேரம் நெளிவதுண்டு.

கொலையுதிர்க் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு சென்ற இவர் நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசியதால் சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் திமுக வில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து சில காலம் அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது இவர் அதிமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்ற அவர் பூங்கொத்தைக் கொடுத்து அதிமுகவில் இணைந்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் திமுக மேடைகளில் அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருந்தார். இப்போது அதிமுக மேடைகளில் அவர்களையே புகழுந்து பேச வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News