×

ரயில்வே தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – திமுக பெருமிதம் !

ரயில்வே துறையில் பதவி உயர்வுக்காக எழுதப்படும் தேர்வுகளை இனி தமிழிலும் நடத்தலாம் என ரயில்வெ துறை அறிவித்துள்ளது. General Departmental Competitive Exam எனப்படும் போட்டித் தேர்வு ரயில்வேத் துறையில் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வுகள் இதுவரை இந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. திமுக எம்.பி தலைமையில் ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும் தேர்வினைத் தமிழில் நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர்
 
ரயில்வே தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – திமுக பெருமிதம் !

ரயில்வே துறையில் பதவி உயர்வுக்காக எழுதப்படும் தேர்வுகளை இனி தமிழிலும் நடத்தலாம் என ரயில்வெ துறை அறிவித்துள்ளது.

General Departmental Competitive Exam எனப்படும் போட்டித் தேர்வு ரயில்வேத் துறையில் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வுகள் இதுவரை இந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

திமுக எம்.பி தலைமையில் ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும் தேர்வினைத் தமிழில் நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்ப்புகள் அதிகமானதை அடுத்து ரயில்வே துறை நேற்று தனது முடிவை மாற்றி மாநில மொழிகளில் தேர்வு எழுதத் தடையில்லை என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்க்த்தில் “ரயில்வேயில் துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திமுக போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து திமுக உறுதியுடன் போராடும்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News