×

ரஜினியுடன் கை கோர்க்கும் அழகிரி? – அதிர்ச்சியில் திமுக

Alagiri join Rajinikanth party – ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கும் போது அவருடன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலின் சகோதரருமான அழகிரி இணைந்து செயலாற்ற சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 22 தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலையில் அதிமுக
 
ரஜினியுடன் கை கோர்க்கும் அழகிரி? – அதிர்ச்சியில் திமுக

Alagiri join Rajinikanth party – ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கும் போது அவருடன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலின் சகோதரருமான அழகிரி இணைந்து செயலாற்ற சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 22 தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலையில் அதிமுக இருக்கிறது. இல்லையேல் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, இந்த தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பாதாக கருதப்படுகிறது.

ரஜினியுடன் கை கோர்க்கும் அழகிரி? – அதிர்ச்சியில் திமுக

இந்நிலையில், எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என ரஜினி அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி கவிழ்ந்தால் உடனடியாக கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அரசியலில் களம் இறங்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு, கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்ட ரஜினி, அழகிரியை தன் கட்சியில் இணைய வேண்டும் என கேட்டாராம். இதற்கு அழகிரியும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு அழகிரி நீண்ட நாள் நண்பர். இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வதுண்டு. ஏற்கனவே, திமுகவில் தன்னை ஸ்டாலின் சேர விடாமல் தடுப்பதால், ரஜினியுடன் இணைந்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க அழகிரி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ரஜினியுடன் கை கோர்க்கும் அழகிரி? – அதிர்ச்சியில் திமுக

மேலும், அழகிரியை இணைத்துக்கொண்டால் தென் மாவட்டங்களில் அதிக ஓட்டுகளை அழகிரி பெற்றுத்தருவார் என்பதால் ரஜினி இந்த கணக்கைப் போடுவதாக தெரிகிறது.

இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News