×

அரசியல் வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் – மு.க.அழகிரி அதிரடி பேட்டி

தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ‘ தமிழகத்தில் ஆளுமையுள்ள அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது’ என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்தை மறுத்து அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி ‘தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை தான்.
 
அரசியல் வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் – மு.க.அழகிரி அதிரடி பேட்டி

தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ‘ தமிழகத்தில் ஆளுமையுள்ள அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது’ என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்தை மறுத்து அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி ‘தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை தான். அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் வந்து நிரப்புவார்’ என தெரிவித்தார். ரஜினி கட்சி துவங்கினால் அதில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு ‘அதுபற்றி இப்போது கருத்து கூற முடியாது’ என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News