×

என் மீது காவி நிறம் பூச பார்க்கிறார்கள் – என்னடா ரஜினி இப்படி புளிச்சினு துப்பிட்டாரு…

என்னை பாஜக வளைக்க முடியாது என்கிற ரீதியில் ரஜினிகாந்த் கொடுத்துள்ள பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி இதுவரை தனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. அதேநேரம், அவர் கூறியது போல் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை அவரின் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரம், பிரதமர் மோடியை பாராட்டி அவர் பேசி வருவதால், ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்றே
 
என் மீது காவி நிறம் பூச பார்க்கிறார்கள் – என்னடா ரஜினி இப்படி புளிச்சினு துப்பிட்டாரு…

என்னை பாஜக வளைக்க முடியாது என்கிற ரீதியில் ரஜினிகாந்த் கொடுத்துள்ள பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி இதுவரை தனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. அதேநேரம், அவர் கூறியது போல் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை அவரின் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அதேநேரம், பிரதமர் மோடியை பாராட்டி அவர் பேசி வருவதால், ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்றே பலரும் அவரை விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘ திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல் எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள். இதில், வள்ளுவரும் மட்டமாட்டார். நானும் மட்ட மாட்டேன்.. பாஜகவில் இணைய எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை’ என அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார்.

ரஜினி இந்த பேட்டியில் கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இது நிச்சயம் அதிர்வலைகளையும் விவாதங்களை உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஜினியின் இந்த நிலைப்பாடு அவர் மீதான் இமேஜை மக்கள் மத்தியில் உயர்த்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News