×

அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கம் – எடப்பாடி திடீர் முடிவின் பின்னணி !

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறை மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழ்ல்நுட்ப துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் மணிகண்டனிடம் இருந்து அந்த பொறுப்புகள் பிடுங்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை நேற்றிரவு ஆளுநர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு முதல்முறையாக அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கானப் பின்னணி காரணங்கள் குறித்து விசாரிக்கையில் அரசு கேபிள்கள்
 
அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கம் – எடப்பாடி திடீர் முடிவின் பின்னணி !

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறை மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழ்ல்நுட்ப துறை அமைச்சராக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் மணிகண்டனிடம் இருந்து அந்த பொறுப்புகள் பிடுங்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை நேற்றிரவு ஆளுநர் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு முதல்முறையாக அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கானப் பின்னணி காரணங்கள் குறித்து விசாரிக்கையில் அரசு கேபிள்கள் இதுநாள் வரை தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. ஆனால் திடீரென சில நாட்களுக்கு முன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை தமிழக அரசு கேபிள் கழகத் தலைவராக நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கோபமடைந்த மணிகண்டன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வரையும் உடுமலை ராதாகிருஷ்ணனையும் குற்றம் சாட்டிப் பேசினார்.

இதையடுத்துதான் மணிகண்டனின் பதவிநீக்கம் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு மூலம் நடந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News