×

அரசியலுக்காக சினிமாவை தியாகம் செய்யனுமா ? –ஸ்டாலினின் கண்டீஷனால் குழப்பத்தில் உதயநிதி !

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலலில் ஆர்வம் இருந்தால் சினிமாவுக்கு முழுக்குப் போடு என தன் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடன்பிறப்புகள் மட்டும் அதற்கு ஒரே ஒருக் காரணத்தை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால் உதயநிதியின் அனல் பறக்கும் பிரச்சாரமே இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுதான். இந்நிலையில் வெற்றிக்குப் பரிசாக உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் மாவட்ட
 
அரசியலுக்காக சினிமாவை தியாகம் செய்யனுமா ? –ஸ்டாலினின் கண்டீஷனால் குழப்பத்தில் உதயநிதி !

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலலில் ஆர்வம் இருந்தால் சினிமாவுக்கு முழுக்குப் போடு என தன் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடன்பிறப்புகள் மட்டும் அதற்கு ஒரே ஒருக் காரணத்தை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால் உதயநிதியின் அனல் பறக்கும் பிரச்சாரமே இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுதான்.

இந்நிலையில் வெற்றிக்குப் பரிசாக உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் மாவட்ட வாரியாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். வீட்டுக்குள்ளேயும் ஸ்டாலினுக்கு அழுத்தம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

அதனால் கடுப்பான ஸ்டாலின் உதயநிதியிடம் ’அரசியலில் ஆர்வம் இருந்தால் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமாகக் களத்தில் இறங்கு. தினமும் கட்சி அலுவலகத்துக்கு வா’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலினின் இந்த அதிரடியான உத்தரவால் உதயநிதி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்து வருகிறாராம். சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவிலும் இறங்குமுகமாக இருந்துவருவது கண்கூடு.

From around the web

Trending Videos

Tamilnadu News