×

சிறையிலிருந்து ஜெயா டிவிக்கு கடிதம் எழுதும் சசிகலா: நமது எம்ஜிஆரிலும் வெளியாகலாம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது ஓய்வு நேரத்தில் ஜெயா டிவி உள்ளிட்ட தனக்க பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதி வருவதாக தகவல்கள் வருகின்றன. சிறையில் இருக்கும் சசிகலா முன்னர் புத்தகம் படித்து தனது நேரத்தை கழிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது புத்தகம் படிப்பதை விட டிவி பார்ப்பதிலும், கடிதம் எழுதுவதிலும் சசிகலா அதிக நேரத்தை செலவழிப்பதாக கூறப்படுகிறது. தற்போது அடிக்கடி கடிதம் எழுத ஆரம்பித்திருக்கும் சசிகலா,
 
சிறையிலிருந்து ஜெயா டிவிக்கு கடிதம் எழுதும் சசிகலா: நமது எம்ஜிஆரிலும் வெளியாகலாம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா தனது ஓய்வு நேரத்தில் ஜெயா டிவி உள்ளிட்ட தனக்க பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதி வருவதாக தகவல்கள் வருகின்றன.

சிறையில் இருக்கும் சசிகலா முன்னர் புத்தகம் படித்து தனது நேரத்தை கழிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது புத்தகம் படிப்பதை விட டிவி பார்ப்பதிலும், கடிதம் எழுதுவதிலும் சசிகலா அதிக நேரத்தை செலவழிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அடிக்கடி கடிதம் எழுத ஆரம்பித்திருக்கும் சசிகலா, அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும், தினகரனுக்கு, ஜெயா டிவிக்கு எனப் பலருக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதியபடியே இருக்கிறாராம். சிறையில் உள்ள சசிகலாவிடம் இருந்து வரும் கடிதங்களை ஆச்சரியமாகவும் பொக்கிஷமாகவும் பார்க்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். மேலும் சிறை விதி அனுமதித்தால், நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலாவின் கடிதத்தை தினமும் வெளியிடலாமா எனவும் ஆலோசனை நடந்துவருகிறதாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News