×

சீமான், கஸ்தூரி நட்பின் வயது 25 – செல்பி போட்டு பிறந்தநாள் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லியுள்ளார். தமிழக அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக மாறிவருகிறார் நாம் தமிழர் சீமான். இந்நிலையில் அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி அவரோடு செல்பி எடுத்து டிவிட்டரில் வாழ்த்து சொல்லியுள்ளார். மேலும் தனது வாழ்த்தில் ‘25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி. பெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’ எனத்
 
சீமான், கஸ்தூரி நட்பின் வயது 25 – செல்பி போட்டு பிறந்தநாள் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக மாறிவருகிறார் நாம் தமிழர் சீமான். இந்நிலையில் அவரின் 53 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்குத் தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி அவரோடு செல்பி எடுத்து டிவிட்டரில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

மேலும் தனது வாழ்த்தில் ‘25 ஆண்டுக்கால நட்பே, நூறாண்டு வாழி. பெருமதிப்பிற்கு உரிய சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

அது என்ன 25 ஆண்டுகால நட்பு என்றால் கஸ்தூரி அமைதிப்படை படத்தில் நாயகியாக நடித்தபோது சீமான் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் என்பதை நினைவில் கொள்க.

From around the web

Trending Videos

Tamilnadu News