×

பலமுறை சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் சென்ற சீமான் கட்சிக்காரர் ? – என்ன ரகசியம் தெரியுமா ?

சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் பலமுறை சுங்கச்சாவடியைக் கடந்து சென்றாலும் சுங்கப்பணம் கட்டியதே இல்லை எனப் பெருமிதமாகக் கூறியுள்ளார். முகப்புத்தகத்தில் நேற்று முழுவதும் வித்தியாசமான ஸ்க்ரின்ஷாட் உலாவந்து கொண்டிருந்தது. அதைக் கொஞ்சம் ஒப்பன் பண்ணிப் பார்த்தா எழுதப்பட்டிருந்த நான்கு வரி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க வைத்தது. பிரபாகர் பிரபு என்ற அந்த நபர் நாம் தமிழர் என்ற பக்கத்தில் ‘பலமுறை சுங்கச்சாவடியை கடந்தும் ஒருமுறை கூட சுங்கவரி கட்டியது கிடையாது. காரணம்
 
பலமுறை சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் சென்ற சீமான் கட்சிக்காரர் ? – என்ன ரகசியம் தெரியுமா ?

சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் பலமுறை சுங்கச்சாவடியைக் கடந்து சென்றாலும் சுங்கப்பணம் கட்டியதே இல்லை எனப் பெருமிதமாகக் கூறியுள்ளார்.

முகப்புத்தகத்தில் நேற்று முழுவதும் வித்தியாசமான ஸ்க்ரின்ஷாட் உலாவந்து கொண்டிருந்தது. அதைக் கொஞ்சம் ஒப்பன் பண்ணிப் பார்த்தா எழுதப்பட்டிருந்த நான்கு வரி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க வைத்தது. பிரபாகர் பிரபு என்ற அந்த நபர் நாம் தமிழர் என்ற பக்கத்தில் ‘பலமுறை சுங்கச்சாவடியை கடந்தும் ஒருமுறை கூட சுங்கவரி கட்டியது கிடையாது. காரணம் பைக்ல இருக்கும் அண்ணன் சீமான் படம், எவனுக்கு தைரியம் வரும் வசூல் செய்ய… நாம் தமிழர்….’ என தன்னைப் பற்றி தானே பெருமைப் பட்டுக்கொண்டுள்ளார்.

என்னடா இது இவரு லூசா இல்ல லூசு மாறி நடிக்கிறாரா என நாம் யோசிப்பதற்குள் அதற்கு கீழே கமெண்ட் போட்டுள்ளார் ஒருவர். அவரின் கமெண்ட் ‘உறவே இரு சக்கர வாகனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது’ எனத் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா ஒரு ரௌண்ட் ஓட விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அய்யாவுக்கு தில்ல பாத்தியா: அப்டேட் குமாரு

From around the web

Trending Videos

Tamilnadu News