×

கொங்கு மண்டலத்துக்கு செந்தில் பாலாஜி… தேனிக்கு தங்க தமிழ்ச்செல்வன் – திமுக வின் மாஸ்டர் ப்ளான் !

அமமுகவில் இருந்து விலகியுள்ள தங்க தமிழ்ச்செல்வனை திமுக வுக்குள் கொண்டுவர செந்தில் பாலாஜி மூலம் வலைவிரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக தங்க தமிழ்ச்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கு இடையில் தொடங்கிய பனிப்போர் இப்போது ஆடியோ மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் தங்க தமிழ்ச்செல்வனிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டதாக அமமுக தலைமை அறிவித்துள்ளது. தங்க தமிழ்ச்செல்வனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி
 
கொங்கு மண்டலத்துக்கு செந்தில் பாலாஜி… தேனிக்கு தங்க தமிழ்ச்செல்வன் – திமுக வின் மாஸ்டர் ப்ளான் !

அமமுகவில் இருந்து விலகியுள்ள தங்க தமிழ்ச்செல்வனை திமுக வுக்குள் கொண்டுவர செந்தில் பாலாஜி மூலம் வலைவிரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பாக தங்க தமிழ்ச்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கு இடையில் தொடங்கிய பனிப்போர் இப்போது ஆடியோ மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் தங்க தமிழ்ச்செல்வனிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டதாக அமமுக தலைமை அறிவித்துள்ளது.

தங்க தமிழ்ச்செல்வனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக அமைச்சர்கள்தான் மும்முரமாக வேலைப்பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அதிமுக வில் இப்போது தங்க தமிழ்ச்செல்வன் சேருவதற்கான வாய்ப்புகள் கம்மிதான் என்கிறது அரசியல் பட்சி.

ஆனால் திடீர் திருப்பமாக செந்தில் பாலாஜி மூலம் அவரை திமுக பக்கம் இழுப்பதற்கான வேலைகளும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியை இழுத்து எப்படி கொங்கு மண்டலத்தில் தங்களை திமுக பலப்படுத்திக் கொண்டதோ அது போல தங்கத்தை இழுத்து தேனி மற்றும் மதுரைப் பகுதிகளில் காலூன்ற திமுக விரும்புகிறது. அதற்காக தங்க தமிழ்ச்செல்வனிடம், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட பதவிகள் மற்றும் சீட் ஆகியவை வழங்கப்படும் என முதல்கட்ட காய்நகர்த்தல் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News