×

உடன்பிறப்புகள் எழுதிக்கொடுத்த கொத்தடிமைப் பத்திரம் – டிவிட்டர் வைரல் !

திமுக இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை அடுத்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இணையத்தில் இருக்கும் உடன்பிறப்புகள் இதற்கும் முட்டுக்கொடுத்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்க, அவர்கள் எழுதிய கொத்தடிமை சாசனப் பத்திரம் போல நெட்டிசன்கள் ஒரு நக்கல் பத்திரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ‘ கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மூன்றுபுறம் எல்லையாகவும்
 
உடன்பிறப்புகள் எழுதிக்கொடுத்த கொத்தடிமைப் பத்திரம் – டிவிட்டர் வைரல் !

திமுக இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை அடுத்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இணையத்தில் இருக்கும் உடன்பிறப்புகள் இதற்கும் முட்டுக்கொடுத்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்க, அவர்கள் எழுதிய கொத்தடிமை சாசனப் பத்திரம் போல நெட்டிசன்கள் ஒரு நக்கல் பத்திரத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘ கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மூன்றுபுறம் எல்லையாகவும் வங்கக்கடலை ஒருபுறம் எல்லையாகவும் அமையப்பெற்ற தமிழ்நாட்டில் வாழ்கின்ற பெரியாரின் பிள்ளைகள் மற்றும் பேரன்கள், பேத்திகள் ஆகிய நாங்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிக்கொடுத்த கொத்தடிமை பத்திரம் பின்வருமாறு

திமுகவின் ஒருகோடி உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் உயிர் உள்ளவரை, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பேரன்கள், பேத்திகள் அனைவரும் உங்களுக்கும் உங்களுக்குப் பிறகு ஸ்டாலினுக்கும் அவருக்குப் பிறகு உதயநிதிக்கும் அவருக்குப் பிறகு இன்பா உதயநிதிக்கும் அவருக்குப் பிறகு அவருடையப் பிள்ளைகளுக்கும் கொத்தடிமைகளாக இருந்து சொம்பு அடித்து அசிங்கப்படுவோமேத் தவிர ஒருபோதும் திமுகவில் இருந்து விலகி செல்லமாட்டோம் என்பதை சுயநினைவுடன் எழுதிக்கொடுக்கிறோம்.

இப்போது நீங்கள் கொடுக்கும் பேட்டா 200 ரூ என்பதைக் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்து தொகையை சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டிக்கொள்கிறோம்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

இப்படிக்கு

பரம்பரைக் கொத்தடிமைகள்

From around the web

Trending Videos

Tamilnadu News