×

ஜகா வாங்கிய ஸ்டாலின்… நன்றி தெரிவித்த மாபா பாண்டியராஜன் !

மாபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்யக்கூடாது என சொல்லிய ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்து மாபா பாண்டியராஜன்
 
ஜகா வாங்கிய ஸ்டாலின்… நன்றி தெரிவித்த மாபா பாண்டியராஜன் !

மாபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்யக்கூடாது என சொல்லிய ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சியின் போது மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அவரது தவறான செய்கைகளுக்காகதான் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதற்கு கண்டனங்கள் தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன் வீட்டின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மாஃபா உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்து மாபா பாண்டியராஜன் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களைக் கண்டிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் ’அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம்’ என கூறியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த பண்பால் மகிழ்ந்த மாபா பாண்டிய்ராஜன் ‘ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக நான் முதல்வரிடம் பேசி இருக்கிறேன். முதல்வரிடம் என்னுடைய பேச்சு குறித்து குறிப்பிட்டேன். எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News