×

ஸ்டாலின் – மகேஷ் பொய்யாமொழி கூட்டணி: புலம்பும் சீனியர்கள்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தற்போது எல்லாமுமாக இருந்து வருவது மகேஷ் பொய்யாமொழி தான் என திமுக வட்டாராத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து திமுக சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டு எம்எல்ஏ ஆனவர் தான் இந்த மகேஷ். திமுகவினர் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென்றால் மகேஷை தாண்டி தான் அவரை சந்திக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக புலம்புகின்றனர். ஸ்டாலின் திமுக தலைவரான பின்னர்
 
ஸ்டாலின் – மகேஷ் பொய்யாமொழி கூட்டணி: புலம்பும் சீனியர்கள்!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தற்போது எல்லாமுமாக இருந்து வருவது மகேஷ் பொய்யாமொழி தான் என திமுக வட்டாராத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து திமுக சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டு எம்எல்ஏ ஆனவர் தான் இந்த மகேஷ்.

திமுகவினர் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென்றால் மகேஷை தாண்டி தான் அவரை சந்திக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக புலம்புகின்றனர். ஸ்டாலின் திமுக தலைவரான பின்னர் தன்னை யாரும் வீட்டில் சந்திக்க வேண்டாம், அனைவரும் அறிவாலயத்தில் தான் சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

அறிவாலயத்தில் எந்நேரமும் திமுக தலைவர் ஸ்டாலின் அறைக்கு செல்லும் வழியில் உள்ள ஹாலில் மகேஷ் மட்டுமே காத்திருக்கிறாராம். யாராவது ஸ்டாலினை பார்க்க வந்தால் மகேஷுக்கு வணக்கம் வைத்து அவர் ஸ்டாலினிடம் வந்திருப்பவர் குறித்து சொன்னர் பின்னர் தான் வெளியே வந்து சந்திக்கிறாராம் ஸ்டாலின். கட்சியின் சீனியர்கள் வந்தாலும் மகேஷ் ஸ்டாலினிடம் சொன்ன பின்னர் தான் சந்திக்க முடிகிறதாம்.

அந்த ஹாலில் வைக்கப்பட்டுள்ள டிவியில் கலைஞர் செய்தி சேனல் தான் ஓடுகிறதாம். அதனை அங்க்கிருந்து கவனிக்கும் மகேஷ் செய்திகளில் ஏதேனும் தவறு இருந்தால் அங்கிருந்தே சேனலுக்கு போன் போட்டு பேசி மாத்த சோல்லி ஐடியாக்கள் கொடுக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் பல நேரங்களில் மகேஷ் போனில் தான் மற்றவர்களிடம் பேசுகிறாராம். ஸ்டாலின் கையில் இருப்பது இணைய வசதி இல்லாத சாதாரண கீ பேட் டைப்பிலான மொபைல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஸ்டாலினை சந்திக்க மகேஷிடம் சென்று நிற்பது பல சீனியர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கிறதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News