×

அமித்ஷாவுக்கு தேதி குறித்த ஸ்டாலின்: பின்வாங்குமா பாஜக??

மத்திய அரசை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக உயர் நிலை செயல் திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தி தின கொண்டாட்டத்தின் போது அமித் ஷா கூறிய சில கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், அமித்ஷாவுக்கும், மோடிக்கும் தாய்மொழி இந்தியே அல்ல. பிறகு ஏன் இந்தி மொழிக்கு வக்காலத்து? 2 நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா
 
அமித்ஷாவுக்கு தேதி குறித்த ஸ்டாலின்: பின்வாங்குமா பாஜக??

மத்திய அரசை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக உயர் நிலை செயல் திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தி தின கொண்டாட்டத்தின் போது அமித் ஷா கூறிய சில கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. அதிலும் குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், அமித்ஷாவுக்கும், மோடிக்கும் தாய்மொழி இந்தியே அல்ல. பிறகு ஏன் இந்தி மொழிக்கு வக்காலத்து? 2 நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது, இந்தி பேசாத மக்களுக்கு தேள்கொட்டியது போன்ற செய்தி.

இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஒரே நாடு ஒரே மொழி என இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது என்பது இந்தி திணிப்புதான். இன்று இந்தி திணிக்க சட்டம் கொண்டுவருவார்கள், நாளை தமிழைப் படிக்கவும் தடை சட்டம் கொண்டுவந்தாலும் வருவார்கள்.

அமித்ஷாவுக்கு தேதி குறித்த ஸ்டாலின்: பின்வாங்குமா பாஜக??

அதனால்தான் இந்தி திணிப்பை தந்தை பெரியார் கலாசார படையெடுப்பு என்றார். அத்தகைய கலாசார படையெடுப்பை எதிர்க்கும் போராட்டத்துக்கு திமுக தயாராக இருக்கும் என ஸ்டாலின் கூறினார். அதற்கு ஏற்ப தற்போது திமுக சார்பிலான கண்டன ஆர்பாட்டத்திற்கு தேதி குறித்துவிட்டார்.

ஆம், திமுக தலைமையில் நடைபெற்ற, உயர் நிலை செயல் திட்டக்குழுவில் மத்திய அரசை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கமானது அமித் ஷாவின் இந்தி திணிப்பு கருத்து மற்றும் ஒரே ரேஷன் ஒரே நாடு திட்டத்தை எதிர்க்கும் வகையில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News