×

கட்சியினருடன் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் !

கட்சியின் பொதுக்குழுவில் தேவைப்பட்டால், சர்வாதிகாரத்தை கையில் எடுப்பேன் என பொதுக்குழுவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ’ இந்த பொதுக்குழுவில் நாம் அமர்ந்திருப்பதற்கு தொண்டர்கள்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்களெல்லாம் எவ்வளவோ அனுபவித்திருக்கிறீர்கள். ஆனால் பல லட்சம் தொண்டர்கள் இன்னும் ஒன்றும் அனுபவிக்கவில்லை.. கட்சி நலனுக்காகச் சர்வாதிகாரத்தைக் கையிலெடுப்பேன் என்று நிர்வாகிகளிடம் குறிப்பிட்டேன். இப்போதும்
 
கட்சியினருடன் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் !

கட்சியின் பொதுக்குழுவில் தேவைப்பட்டால், சர்வாதிகாரத்தை கையில் எடுப்பேன் என பொதுக்குழுவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ’ இந்த பொதுக்குழுவில் நாம் அமர்ந்திருப்பதற்கு தொண்டர்கள்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்களெல்லாம் எவ்வளவோ அனுபவித்திருக்கிறீர்கள். ஆனால் பல லட்சம் தொண்டர்கள் இன்னும் ஒன்றும் அனுபவிக்கவில்லை.. கட்சி நலனுக்காகச் சர்வாதிகாரத்தைக் கையிலெடுப்பேன் என்று நிர்வாகிகளிடம் குறிப்பிட்டேன். இப்போதும் அதையே சொல்லுகிறேன். இங்கே திடலில் அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களோடு நானும் சாப்பிடுகிறேன்’ என கூறினார்.

கூட்டம் முடிந்தபின் மதிய உணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் வறுவல் என அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஸ்டாலினோடு சேர்ந்து கட்சி நிர்வாகிகள் மதிய உணவை சாப்பிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News