×

சுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்தினர் பணம் – எடப்பாடி குற்றச்சாட்டு !

கொள்ளையடித்த பணத்தையெல்லாம் திமுக சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாங்குநேரி சென்றுள்ளார். நேற்று அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அவர் தனது முதல்நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘ நாங்குநேரி தொகுதியைக் கைவிட்டுச் சென்ற காங்கிரஸுக்கு அதிமுக வெற்றியின் மூலம் பாடம் புகட்டுங்கள். அதிமுக வேட்பாளர் நாராயணன் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். அவரை நீங்கல் எளிதில் அனுகலாம். ஆனால்,
 
சுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்தினர் பணம் – எடப்பாடி குற்றச்சாட்டு !

கொள்ளையடித்த பணத்தையெல்லாம் திமுக சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாங்குநேரி சென்றுள்ளார். நேற்று அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அவர் தனது முதல்நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ‘ நாங்குநேரி தொகுதியைக் கைவிட்டுச் சென்ற காங்கிரஸுக்கு அதிமுக வெற்றியின் மூலம் பாடம் புகட்டுங்கள். அதிமுக வேட்பாளர் நாராயணன் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர். அவரை நீங்கல் எளிதில் அனுகலாம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரோ சென்னையில் வசிக்கிறார்.

ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். சுவிஸ் வங்கியில் டெபாஸிட் செய்திருப்பவர்களின் பட்டியலை மோடி பெற்றுள்ளார். அந்தப் பட்டியலில் திமுகவினரும் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் ஸ்டாலின் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News