×

ஸ்ட்ரைட்டா போர்தான்… ஐ ஆம் வைட்டிங் … – ரஜினியை சீண்டிய சீமான் !

ரஜினி அரசியலில் இறங்கினால் ஸ்ட்ரைட்டா போர்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் மேடைகளில் நரம்புகள் புடைக்க அடிவயிற்றில் இருந்து முழங்கும் பேச்சைக் கேட்க தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அதேப் போல சீமானின் பேச்சை விமர்சனம் செய்யவும் ஒருக் கூட்டம் உருவாகியுள்ளது. சீமானின் அரசியல் உரைகள் யூட்யூப் போன்ற சமூகவலைதளங்களில் வைரல் ஹிட் ஆகி வருகின்றன. இந்நிலையில் சூலூரி தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான். அப்போது
 
ஸ்ட்ரைட்டா போர்தான்… ஐ ஆம் வைட்டிங் … – ரஜினியை சீண்டிய சீமான் !

ரஜினி அரசியலில் இறங்கினால் ஸ்ட்ரைட்டா போர்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் மேடைகளில் நரம்புகள் புடைக்க அடிவயிற்றில் இருந்து முழங்கும் பேச்சைக் கேட்க தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அதேப் போல சீமானின் பேச்சை விமர்சனம் செய்யவும் ஒருக் கூட்டம் உருவாகியுள்ளது. சீமானின் அரசியல் உரைகள் யூட்யூப் போன்ற சமூகவலைதளங்களில் வைரல் ஹிட் ஆகி வருகின்றன.

இந்நிலையில் சூலூரி தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான். அப்போது பேசிய அவர் ‘ ரஜினி அரசியலுக்கு வந்துட்டா ஸ்ட்ரைட்டா போர்தான். ஒரே கேள்விதான்.. தமிழ்நாட்டில் உங்களுக்கு என்ன வேலை ?… நான் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் ரஜினி பதில் சொல்லி தப்பிக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை வந்துடும் ஆட்டம் காலியாயிடும். அந்த நாளுக்காக ஐ ஆம் வெயிட்டிங்! . தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் படேல் சிலைக்கு நிகராக விவசாயிக்கு சிலை வைப்பேன். யாராவது கேலி செய்தால் அவர்களை இருட்டறையில் போட்டு பூட்டிடுவேன்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News