×

சுபஸ்ரீ இறக்க வேண்டும் என்பது விதி – பிரேமலதா தரம்தாழ்ந்த பேச்சு !

சமீபத்தில் பேனரால் ஏற்பட்ட விபத்தில் இறந்த சுபஸ்ரீ மரணம் குறித்து சர்ச்சையானக் கருத்துகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிமுக கட்சியினர் வைத்திருந்த வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் அவர் தடுமாறி விழ லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உளுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
சுபஸ்ரீ இறக்க வேண்டும் என்பது விதி – பிரேமலதா தரம்தாழ்ந்த பேச்சு !

சமீபத்தில் பேனரால் ஏற்பட்ட விபத்தில் இறந்த சுபஸ்ரீ மரணம் குறித்து சர்ச்சையானக் கருத்துகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிமுக கட்சியினர் வைத்திருந்த வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் அவர் தடுமாறி விழ லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உளுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து அனைத்துக் கட்சிகளுக்கும் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தேமுதிகவின் பிரேமலதா சர்ச்சையைக் கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.

ஆவடியில் நடைபெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரேமலதா ‘எதார்த்தமாக நடந்த விஷயம்தான். பேனர் வைக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த நேரத்தில், அந்தப் பெண் அங்கி செல்ல, காற்றில் பேனர் அந்தப் பெண் மீது விழ வேண்டும். பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏற வேண்டும். அவர் இறக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது. இதை மன வருத்தத்தோடு இங்கு நான் பதிவு செய்கிறேன். இதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி வருகின்றனர்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News