×

திடீர் திருப்பம் – 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

Velur Election 2019 – திடீர் திருப்பமாக வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்நிலையில்,
 
திடீர் திருப்பம் – 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

Velur Election 2019 – திடீர் திருப்பமாக வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

திடீர் திருப்பம் – 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்நிலையில், இதில் அதிமுக வேட்பார் ஏ.சி.சண்முகம் தொடர் முன்னிலை வகித்து வந்தார். கதிர் ஆனந்தை விட ஏ.சி.சண்முகம் 15 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகித்து வந்தார். அதன்பின் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக தற்போது கதிர் ஆனந்த் 2,87,906 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 2,75,748 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி கதிர் ஆனந்த் 12,158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். கதிர் ஆனந்த் முன்னிலைக்கு வந்திருப்பது திமுகவின் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த திடீர் திருப்பம் அதிமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 14,761 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News