×

சூர்யாவுக்கு அந்த தகுதி உண்டு – ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்

Neet Exam – நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை?
 
சூர்யாவுக்கு அந்த தகுதி உண்டு – ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்

Neet Exam – நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை? பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், நுழைவுத் தேர்வில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?” என பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

சூர்யாவுக்கு அந்த தகுதி உண்டு – ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்

சூர்யாவின் கருத்திற்கு ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் பலரும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு #StandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சூர்யாவின் கருத்துகளுக்கு கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு’ என குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News