×

தரம் தாழ்ந்த எஸ் வி சேகர் – அருவருப்பான டிவிட்டை ரிடிவிட் செய்து சர்ச்சை !

பாஜக ஆதரவாளரான எஸ் வி சேகர் டிவிட்டரில் சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை ரிடிவிட் செய்துள்ளார். தலித்துகள் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் குழந்தைகள் மனதில் எதிர்மறையான எண்ணங்களை விதைக்கும் விதமாக சித்தரிக்கும் வகையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பாடங்கள் அமைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு டிவிட்டரில் ஒரு ஆசாமி கலைஞர், ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தி ஒரு வினாத்தாளை உருவாக்கி பகிர அதை ரிடிவீட்
 
தரம் தாழ்ந்த எஸ் வி சேகர் – அருவருப்பான டிவிட்டை ரிடிவிட் செய்து சர்ச்சை !

பாஜக ஆதரவாளரான எஸ் வி சேகர் டிவிட்டரில் சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை ரிடிவிட் செய்துள்ளார்.

தலித்துகள் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் குழந்தைகள் மனதில் எதிர்மறையான எண்ணங்களை விதைக்கும் விதமாக சித்தரிக்கும் வகையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பாடங்கள் அமைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அவரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு டிவிட்டரில் ஒரு ஆசாமி கலைஞர், ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தி ஒரு வினாத்தாளை உருவாக்கி பகிர அதை ரிடிவீட் செய்துள்ளார் எஸ் வி சேகர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட எஸ் வி சேகர் போலிஸ் பாதுகாப்போடு தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அதற்கு எதிர்ப்பு அதிகமாகவே அந்த டிவிட்டை நீக்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News