×

அண்டை மாநிலத்தவரால் பாதிக்கப்படும் தமிழக வணிகர்கள் – சீர்காழியில் விநியோகிக்கப்பட்ட வினோத நோட்டீஸ் !

அண்டை மாநிலத்தவரால் பாதிக்கப்படும் தமிழக வணிகர்கள் – சீர்காழியில் விநியோகிக்கப்பட்ட வினோத நோட்டீஸ் ! சீர்காழி நகர் வசிக்கும் தமிழக வணிகர்களுக்கு மார்வாடிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகளால் பாதிப்பு ஏற்படுவதாகவும் அதனால் அவர்களுக்கு இனிமேல் சீர்காழியில் இடம் அளிக்கக் கூடாது எனவும் போஸ்டர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பிட்ட அந்த போஸ்டரில் ’சீர்காழி நகரில் அடகு வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்த மார்வாடிகள் மற்றும் வெளிமாநிலத்தவர் இன்று அனைத்து தொழில்களிலும் ஜவுளி, வாகன உதிரிபாகங்கள்,
 
அண்டை மாநிலத்தவரால் பாதிக்கப்படும் தமிழக வணிகர்கள் – சீர்காழியில் விநியோகிக்கப்பட்ட வினோத நோட்டீஸ் !

அண்டை மாநிலத்தவரால் பாதிக்கப்படும் தமிழக வணிகர்கள் – சீர்காழியில் விநியோகிக்கப்பட்ட வினோத நோட்டீஸ் !

சீர்காழி நகர் வசிக்கும் தமிழக வணிகர்களுக்கு மார்வாடிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகளால் பாதிப்பு ஏற்படுவதாகவும் அதனால் அவர்களுக்கு இனிமேல் சீர்காழியில் இடம் அளிக்கக் கூடாது எனவும் போஸ்டர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பிட்ட அந்த போஸ்டரில் ’சீர்காழி நகரில் அடகு வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்த மார்வாடிகள் மற்றும் வெளிமாநிலத்தவர் இன்று அனைத்து தொழில்களிலும் ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், மின் பொருட்கள், உணவுத் தொழில், கல்வி நிலையங்கள், நிதி நிறுவனம், விவசாய நிலம் வாங்குதல் என அனைத்து தொழில்களிலும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டனர். இனியும் இவர்களை நாம் அனுமதித்தோம் என்றால் நம் நில இழப்பு என்பது தாயக இழப்பாகும். எனவே நம் மண்ணை விட்டு அகலும் நிலை ஏற்படும்.

மேலும் சீர்காழி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காத்திட சீர்காழி நகரில் வெளிமாநிலத்தாருக்கு கடையோ, வீடோ, விற்பனைக்கோ, வாடகைக்கோ கொடுக்கமாட்டோம் என்று சீர்காழி நகர பகுதி மக்களும், சீர்காழி வர்த்தகர் நல சங்கமும் உறுதியேற்போம். மேலும் வெளிமாநிலத்தார் கடைகளிலும் நிறுவனங்களிலும் நம் மக்கள் எந்த வித வர்த்தகமும் செய்ய மாட்டோம் என்றும் உறுதியேற்போம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தமிழக அரசுக்குக் கவனத்தில் எடுத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட வியாபாரிகளின் கோரிக்கைக்கு தீர்வு காணுமா ?

From around the web

Trending Videos

Tamilnadu News